Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக் கோவிலை ஆக்கிரமிக்கும் இஸ்லாமிய அமைப்பினர்! ஆக்கிரமிக்கப்படும் இந்துக் கோவில்கள்?

இந்துக் கோவிலை ஆக்கிரமிக்கும் இஸ்லாமிய அமைப்பினர்! ஆக்கிரமிக்கப்படும் இந்துக் கோவில்கள்?
X

ShivaBy : Shiva

  |  28 July 2021 12:46 AM GMT

திருநெல்வேலி அருகே ஆழ்வார்குறிச்சியில் உள்ள புகழ்பெற்ற அத்திரி மலையை இஸ்லாமிய அமைப்புகள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தி இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்து சமய அறநிலையத் துறையின் மேற்பார்வையில் அருள்மிகு அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில் மற்றும் கோரக்கர் திருக்காேவில் அத்ரி மலையில் அமைந்துள்ளது. கங்கைக்கு நிகரான அத்ரி கங்கை தீர்த்தம் வற்றாத நிலையில் உள்ளது. இதில் வெள்ளை ஆமை ஒன்று உள்ளது. இதனை காண்பது அரிது. வைகாசி மாதத்தில் குறிப்பிட்ட நாள்களில் மரங்களில் இருந்து பன்னீர் தெளிப்பது போல் இச்சன்னதி அருகில் விழும். இம்மலையில் ஓடும் கடனா நதி காேடையிலும் வற்றாது ஓடும் தன்மை காெண்டது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த இந்த மலையில் தற்போது இஸ்லாமிய அமைப்புகளால் ஆக்கிரமிப்பு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வனத்துறை அனுமதியுடன் அந்த மலைக்கு செல்லும் சிலர் சித்தர்கள் வாழ்ந்ததாக கூறும் இடத்தில் இஸ்லாமிய சின்னங்களை வரைந்து வைத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பச்சை நிற பெயின்டைக் கொண்டு சுவர்களில் ஆங்காங்கே எழுதி வைத்துள்ளது பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளது.

மலைக் கோவிலில் பாறைகள் மீது "அல்லா" என்றும் 786 என்று குறியிட்டு இஸ்லாமிய மதச் சின்னமான பிறை நிலவையும் வரைந்து வைத்துள்ளனர். சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சோழர் கால கோவில் ஒன்றில் உள்ள தெய்வச் சிலைகள் அனைத்தும் தலை துண்டிக்கப்பட்டது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழமை வாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் சிலைகள் மீது அசிங்கம் செய்தது போன்ற சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கோவிலில் இஸ்லாமிய மத சின்னங்கள் வரையபட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காலங்காலமாக இந்துக்கள் வழிபட்டு வரும் மலைகளில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News