Kathir News
Begin typing your search above and press return to search.

மிஷனரிகளின் புது டெக்னிக் - இந்துக்களே உஷார்!

மிஷனரிகளின் புது டெக்னிக் - இந்துக்களே உஷார்!
X

ShivaBy : Shiva

  |  28 July 2021 7:47 PM IST

இந்து மதத்தில் பின்பற்றப்படும் அனைத்து பழக்கவழக்கங்களையும் காப்பி அடித்து வரும் கிறிஸ்தவ மிஷனரிகள் கிளி ஜோசியத்தையும் விட்டுவைக்காத சம்பவம் அரங்கேறியுள்ளது.



இந்து மதத்தில் இருக்கும் அனைத்து சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கைகள் என்று கூறி வந்த மிஷனரிகள், தற்போது அவற்றை பயன்படுத்தியே மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அஅ வகையில் மக்களை மட்டுமல்லாமல் பழக்க வழக்கங்களையும் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதை காலம் காலமாக செய்து வரும் கிறிஸ்தவ மிஷினரிகளின் அடுத்த இலக்காக கிளி ஜோசியம் மாறியுள்ளது.

இந்துக்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறுமா என்று அறிய ஜாதகம், கிளி ஜோசியம் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்துக்கள் மட்டுமே இதுவரை நம்பி வந்த கிளி ஜோசியத்தை தற்போது கிறிஸ்தவர்களும் கடைபிடிக்க தொடங்கி உள்ளனர்.

இயேசுவின் அருள்வாக்கு ஊழியம் என்ற பெயரில் முற்றிலும் பழக்கப்பட்ட கிளியை கொண்டு சீட்டு எடுத்து சுவிசேஷம் அறிவிக்கப்படும் என்று இயேசுதாஸ் என்பவர் கிளி ஜோசியம் பார்த்து வருவது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.‌ பொதுவாக கிளி ஜோசியத்தின் போது எடுக்கும் அட்டையில் முருகன், விநாயகர், சிவன் போன்ற எண்ணற்ற இந்து கடவுள்களின் புகைப்படங்கள் இருக்கும். அவற்றை வைத்து ஜோசியர் பலன் கூறுவார்.

ஆனால் இயேசுவின் அருள் வாக்கு மூலம் கிளி எடுக்கும் சீட்டில் என்ன இருக்கும் என்று பார்ப்பதற்கு அனைவரும் ஆர்வத்துடன் இருப்பதாக சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மதம் மாற்றும் நடவடிக்கைக்காக மிஷனரிகள் எந்த காரியத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக இருக்கிறது.

முன்னதாக கொரோனா காலகட்டத்தில் ஊழியம்(மதம் மாற்றுவது) செய்வது குறைந்துவிட்டதாக மதபோதகர்கள் கவலை தெரிவித்த நிலையில் தற்போது ஊழியம் செய்வதற்காக புதுப் புது டெக்னிக்குகளை கண்டுபிடித்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படியானாலும், பிராமணர் போல் வேடமிட்டு ஆங்கிலேயர் ஆட்சியில் மதம் மாற்றிய ராபர்ட் டி நோபிளியில் தொடங்கி இந்த போதகர் இயேசுதாஸ் வரை இந்து மத வழக்கங்களைத் தான் அண்டிப் பிழைக்க வேண்டியிருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News