Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து விரோத மனப்பான்மையை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் திமுக!

இந்து விரோத மனப்பான்மையை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் திமுக!
X

ShivaBy : Shiva

  |  29 July 2021 2:56 AM GMT

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகியிருக்கும் நிலையில் இந்து விரோத கட்சி என்ற பெயரைக் காப்பாற்றும் வகையிலான செல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

திமுக வெற்றிக்குப் பின்னர் இந்து கடவுள்களையும், இந்து சாஸ்திர சம்பிரதாயங்களையும் இழிவுபடுத்துவதையே முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து விரோத போக்கை தீவிரப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக 'இந்து சமய அறநிலையத்துறை' என்று பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்து என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'அறநிலையத்துறை' என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளது.





கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 சதவீதம் கிறிஸ்தவர்கள் இருப்பதாகவும் அவர்கள் போட்ட பிச்சையில் தான் திமுக வெற்றி பெற்றது என்று மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது இந்து என்ற வார்த்தை நீக்கப்பட்டு கன்னியாகுமரியில் இந்து அறநிலையத்துறை அறிவிப்பு பலகை வைத்திருப்பது யாரை சந்தோசப் படுத்துவதற்காக என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதேபோல் பெண்களின் இடுப்பை பற்றி கேலி செய்த கிறிஸ்தவரான திண்டுக்கல் லியோனியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் தலைவராக நியமித்துள்ளனர். இவர் தரும் ஆலோசனையின் பேரில் பாடப்புத்தகங்களில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்பட போகிறது என்று பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தற்போது கள்ளக்காதலுக்கு ஆதரவாக பேசி வருபவரும் கள்ளக்காதலுக்கு புது விளக்கம் கொடுத்தவரும், இந்துக் கடவுளை கும்பிடுவது மட்டுமே மூட நம்பிக்கை என்று சமூக வலைதளங்களிலும் மேடைகளில் பேசி வரும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுப வீரபாண்டியனை தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. குழந்தைகள் படிக்கும் பாடப் புத்தகங்களில் இவர் என்னவெல்லாம் அறிவுரை தரப்போகிறார் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்ததாக தமிழ்நாடு தேர்வு வாரியத்தில் பாதிரியார் ஒருவரை உறுப்பினராக நியமித்து தாங்கள் வாங்கிய ஓட்டுக்கு (பிச்சை) திராவிட முன்னேற்ற கழகம் கைமாறு செய்து வருகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் விஷயம். அது தான் பாதிரியார் ராஜ் மரிய சூசையின் நியமனம். மோடி அரசோ அல்லது உத்திரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசோ இந்து சாதுக்களை இதுபோன்ற உயர்பதவியில் நியமனம் செய்து இருந்தால் மதசார்பின்மை பேசும் நடுநிலைவாதிகள் இதுபோல வாய்மூடி மௌனம் காத்து இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது திராவிட முன்னேற்றக் கழக அரசு தங்களின் இந்து விரோத போக்கை கையில் எடுத்து விட்டதாகவும் இனி என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நிகழப் போகின்றது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News