Kathir News
Begin typing your search above and press return to search.

பெண் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் தாலிபான் தீவிரவாதிகள் - ஆப்கன் பெண்ணின் பகீர் வாக்குமூலம்!

தாலிபான் தீவிரவாதிகளில் குறைந்தபட்சம் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு பெண்ணை தூக்கி சென்று விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பெண் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் தாலிபான் தீவிரவாதிகள் - ஆப்கன் பெண்ணின் பகீர் வாக்குமூலம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Aug 2021 2:39 AM

ஆப்கானிஸ்தான் போலீஸ் படையில் பணியாற்றி வந்த முஸ்கான் எனும் பெண், தாலிபான் தீவிரவாதிகளுக்கு பயந்து தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் News 18 தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், தாலிபான் தீவிரவாதிகள் இறந்த பெண் சடலங்களுடன் உடலுறவு கொள்வதாக பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

பிணங்களுடன் உடலுறவு கொள்வது நெக்ரோபிலியா(necrophilia) என்று சொல்லப்படும். தாலிபான் தீவிரவாதிகளில் குறைந்தபட்சம் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு பெண்ணை தூக்கி சென்று விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

"நான் போலீஸ் பிரிவில் பணியாற்றி வந்ததால் என்னை கொன்று விடுவதாக பகிரங்கமாக மிரட்டினார்கள். வேறு வழியின்றி தாலிபான்களிடம் இருந்து தப்பித்து வந்துள்ளேன்" என கூறுகிறார் முஸ்கான். ஆப்கானிஸ்தான் அரசில் பணிபுரிந்து அனைத்து பெண்களுக்கும் இது தான் அங்கு நிலைமை என்றும், "பிணங்களை கூட உடலுறவு காமத்தில் இருந்து விட்டு வைப்பதில்லை, ஒரு பெண் உயிருடன் இருக்கின்றாளா இல்லையா என்பது கூட அந்த மிருகங்களுக்கு கவலையில்லாமல், எச்சையை போக்குகின்றனர்" என கண்ணீர் மல்க தான் கண்ட காட்சிகளை விவரித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News