Kathir News
Begin typing your search above and press return to search.

மூக்குத்தி அம்மன் காட்சிகளை நீக்கிய பாதிரியார் - ருத்ரதாண்டவத்தை தடை செய்ய அழுத்தம்!

மூக்குத்தி அம்மன் காட்சிகளை நீக்கிய பாதிரியார் - ருத்ரதாண்டவத்தை தடை செய்ய அழுத்தம்!
X

ShivaBy : Shiva

  |  3 Sep 2021 12:13 PM GMT

ருத்ரதாண்டவம் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் அதன் இயக்குனர் மோகன்ஜியை கைது செய்ய வேண்டும் எனவும் கிறிஸ்தவ அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய, தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படாத மையக்கரு மற்றும் பல கருத்துக்களைக் கொண்டு திரௌபதி படத்தை இயக்கி பிரபலமடைந்தார் இயக்குநர் மோகன். காதல் என்ற பெயரில் சாதிய மோதலைத் தூண்டும், இளம் பெண்களின் வாழ்வைச் சீரழிக்கும் நாடகக் காதல் பற்றி தனது முதல் படத்தில் மெசேஜ் சொன்ன மோகன் தற்போது ருத்ரதாண்டவம் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த மாதம் 24-ஆம் தேதி வெளியானது. மத மாற்றம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட இது வரை அனைவரும் தொடத் தயங்கிய விஷயங்கள் இந்த புதிய படத்தில் இடம் பெற்றிருப்பதை ட்ரெயிலர் வெட்ட வெளிச்சமாக்கியது.

ட்ரெயிலர் வெளியானதில் இருந்தே சாதி பெருமையை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக படத்தின் ஒரு பகுதியை மட்டும் சிலர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும்படியாகவும், மதக் கலவரத்தைத் தூண்டும்படியாகவும் இருப்பதால் படத்தைத் தடை செய்து, இயக்குநர் மோகன் ஜியைக் கைது செய்ய வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் நல கட்சி சார்பில் பேராயர் சாம் ஏசுதாஸ் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அனைத்திந்திய கிறிஸ்தவர்கள் உரிமை இயக்கம் என்ற அமைப்பின் தலைவரான பிஷப் சாம் யேசுதாஸ் ஏற்கனவே மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் வந்த சிடி காட்சியை நீக்க திமுக முக்கிய பிரமுகர்களை வற்புறுத்தியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

"நம்முடைய மதக் கடமையை இந்த தேசத்திலே சுதந்திரமாக ஆற்ற, கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்றுபட்டு இந்த தேசத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால், கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நம் வாக்கு‌ நமது ஆயுதம். எனவே அனைவரும் கண்டிப்பாக வாக்களியுங்கள். இந்த தேர்தலில் அகில இந்திய சிறுபான்மையினர் நலக் கட்சி தி.மு.கவை ஆதரிக்கிறோம். " என்று சட்டசபை தேர்தல் சமயத்தில் இவர் பேசி திமுகவிற்கு வாக்கு சேகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

Source : Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News