நாகையில் சோழர் காலத்து ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு !
பழங்கால அம்மன் சிலைகள் கண்டெடுப்பு.
By : TamilVani B
நாகப்பட்டிணம் மாவட்டம் தேவூரில் அமைந்துள்ளது தேவபுரீஸ்வரர் ஆலயம். குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு சாமி தரிசனம் செய்ய வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் அதிக அளவில் வருவர்.
இந்நிலையில், அந்தக் கோவிலில் நவகிர மண்டபம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது பில்லர் அமைப்பத்தற்காக தோண்டபட்ட குழியில் பழமையான சிலைகள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் அந்த இடத்தில் தோண்டும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு பல்வேறு அளவுகளில் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் ஆச்சிரியத்தில் மூழ்கினர். அங்கு 13 அம்பாள் சிலைகளும், திருவாச்சியுடன் அமைந்துள்ள பிரதோஷ நாயனர் சிலையும், பூஜை பொருட்களும் கிடைக்கப்பெற்றன. இந்த அனைத்து பொருட்களும் சுமார் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை என கூறப்படுகிறது.