Kathir News
Begin typing your search above and press return to search.

"என்னோடது தான் ரியலு, எங்கப்பாது ரீல்" நடிகர் விஜய் பரபரப்பு வாக்குமூலம்!

என்னோடது தான் ரியலு, எங்கப்பாது ரீல் நடிகர் விஜய் பரபரப்பு வாக்குமூலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Sep 2021 8:51 AM GMT

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக நேற்று விஜயின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இருந்தார். "2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த இயக்கத்தை கலைத்துவிட்டோம், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை" என எஸ்.ஏ சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன் பரபரப்பு தீயாய் பற்றிக்கொள்ள, தற்போது நடிகர் விஜய் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கம் ஸ்வாரிஸ்யத்தின் உச்சமாக அமைந்து, ரசிகர்களை குழப்பமடைய வைத்துள்ளது.

அந்த விளக்கத்தின்படி, "விஜய் மக்கள் இயக்கம் இப்போதும் இருக்கிறது. நான் தொடங்கிய இயக்கத்தை யாரும் கலைக்கவில்லை. இயக்குனர் சந்திரசேகர் தொடங்கிய இயக்கம் தான் கலைக்கப்பட்டு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் வேற, வெறும் விஜய் மக்கள் இயக்கம் வேறயாம்ப்பா என அடித்துக்கொள்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News