அக்டோபரை இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்த அமெரிக்க மாகணங்கள் !
By : TamilVani B
அமெரிக்காவிலுள்ள டெக்டாஸ், ஒஹியா உள்ளிட்ட மாகாணங்கள் அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் முக்கிய இந்து பண்டிகைகள் நடைபெறுவதால் அந்த மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என பல இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.இந்த கோரிக்கையை அடுத்து அந்த மாகாணங்கள் அக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளது.
இது குறித்து, அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷ்த் தலைவர் அஜய் ஷா கூறியதாவது, பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்து மதத்தின் பெருமைகளை தற்போது தான்வெளிகொணர்ந்து வருகிறோம். பல இந்து அமைப்புகள் சேர்ந்து அரசுக்கு வைத்த கோரிக்கை நிறைவேறியுள்ளது. இதனை அடுத்து அக்டோபர் மாதம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு இந்து பாரம்பரியத்தை எடுத்து கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.