Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பூர் மாவட்டத்தில் வங்கதேச ஊடுருவல்காரர்களை சுற்றி வளைத்த போலீஸ் !

திருப்பூர் மாவட்டத்தில் வங்கதேச ஊடுருவல்காரர்களை சுற்றி வளைத்த போலீஸ் !

Mohan RajBy : Mohan Raj

  |  29 Sep 2021 8:45 AM GMT

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை போலீசார் பிடித்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி மங்கலம் ரோடு, வேலாயுதம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு சட்ட விரோதமாக, வங்கசேதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவள் அடிப்படையில், அவிநாசி போலீசார் நேற்று இரவு, அவர்கள் தங்கியிருந்து அறைக்கு சென்று விசாரித்தனர்.

அப்பொழுது விசாரணையில் வங்கதேசத்தை சேர்ந்த ஜாகிர் உசேன், ஆலாமின், லிட்டன், பில்லாப் கான், முகமது ரியோடான், ரானா சர்பாசி, பபால்புல் அகமது, மற்றும் மோசின் ஹீசைன் ஆகியோர் மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்ட முகவரி கொண்ட ஆதார் அட்டை வைத்திருந்ததும், சட்ட விரோதமாக அங்கு தங்கியிருந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபோன்ற ஊடுருவல்களை தடுக்க குடியுரிமை திருத்த சட்டம் வேண்டி மத்திய அரசு போராடி வரும் வேளையில் அதனை காங்கிரஸ், தி.மு.க போன்ற கட்சிகள் எதிர்த்து வருவது குறிப்பிடதக்கது.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News