Kathir News
Begin typing your search above and press return to search.

கோவா, மேகாலயாவில் கூண்டோடு காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸில் ஐக்கியமா? அதிர்ச்சியில் சோனியா, ராகுல்!

கோவா, மேகாலயாவில் கூண்டோடு காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸில் ஐக்கியமா? அதிர்ச்சியில் சோனியா, ராகுல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Oct 2021 9:45 AM GMT

காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களிலும் கரைந்து வருகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பது மட்டுமின்றி, ஹிமாந்தா ஷர்மா, ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா, அம்ரிந்தர் சிங் போன்ற மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸை விட்டு விலகி விட்டனர்.

இந்நிலையில், தேசிய அளவில் முன் எப்போதும் இல்லாத அளவில், ஒரு பலமற்ற கட்சியாக காங்கிரஸ் ஆகி விட்டது. பல மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் இல்லாமல், எதிர்கட்சியாகவும் இல்லாமல் வேறின்றி அழிந்து விட்டது காங்கிரஸ் கட்சி.

இந்நிலையில், மேலும் காங்கிரஸ் கட்சியை கரைக்க களம் கண்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி. சோனியா, ராகுலுக்கு நெருக்கமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிரணி தலைவர் சுஷ்மிதா தேவ் அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். உடனடியாக அவர் ராஜ்ய சபா எம்.பி-யும் ஆகி விட்டார்.

இந்நிலையில், கோவாவில் காங்கிரஸ் கட்சி இனி வேலைக்கு ஆகாது, பா.ஜ.க-வை எதிர்க்க திரிணாமூல் காங்கிரஸ் தான் சரியான கட்சி என கூறி கோவா முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ பலேரோ காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகி உள்ளார். மேலும் பல காங்கிரஸ் தலைவர்கள் கோவாவில் திரிணாமூல் கட்சியில் ஐக்கியமாவர்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அதிர்ச்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி மீள்வதற்குள் அடுத்து மேகாலயாவிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் கட்சியினரை தங்கள் வலையில் இழுக்க திட்டம் தீட்டிவிட்டது. இதன்படி, மேகாலயா முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனராம். காங்கிரஸுக்கு அம்மாநிலத்தில் 21 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் கோலோச்சிய காங்கிரஸ் கட்சி, இன்று வெகு சில மாநிலங்களில் மட்டுமே இருக்கும் கட்சியாக உருமாறி வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News