Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவிற்கு நிலையான கொள்ளை கிடையாது ! - முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சனம் !

55 ஆண்டுகளாக திமுக ஒரே நிலைபாட்டை கொண்டில்லை என முன்னாள் மத்திய அமைச்சர். பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

திமுகவிற்கு நிலையான கொள்ளை கிடையாது ! - முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சனம் !
X

TamilVani BBy : TamilVani B

  |  15 Oct 2021 1:43 AM GMT

எந்த நிலையான நிலைப்பாடும் திமுகவிற்கு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் பேசியதாவது :

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுக உறுப்பினர்கள் எந்தவித களப் பணிகளையும் செய்ய வில்லை. மக்களை சந்திக்க அவசியமில்லை என அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது வாக்குகளை மக்கள் பதிய விடாமல் தடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் என குற்றசாட்டும் பல இடங்களில் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வாக்குச்சாவடிகளை கைபற்றி வெற்றி பெற்றுவிடலாம் என்று திமுகவினர் நினைத்திருந்தார்கள்.அதை இந்த தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. திமுகவின் கடந்த காலம் முதல் தற்போது வரை பார்த்தால் ஒன்றை எதிர்பார்கள் சிறிது நாட்களில் அதை ஆதரிப்பார்கள் ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்றவையே அதற்கு சான்று என அவர் கூறியுள்ளார். கடந்த 55 ஆண்டுகளாக நிலையான நிலைபாடு இல்லாத கட்சியாக திமுக இருக்கிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

Source: News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News