சமூகப் போராளிகளின் சந்தர்ப்பவாதம்- வசமாக மாட்டிக்கொண்ட சூர்யா, பிரகாஷ்ராஜ்!
By : Shiva
இந்தி பேசுபவர்களுக்கு எதிரான தாக்குதலை ஊக்கப்படுத்தும் விதமாகவும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவை திருப்திப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் நடிகர் சூர்யா நடித்து OTTயில் வெளியாகியுள்ள ஜெய்பீம் படத்தின் ஒரு காட்சி இடம் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
சமூக நீதியை நிலைநாட்டுவதில் தன்னை முனைப்பு கொண்டவராக காட்டிக்கொள்ளும் சூர்யா நடித்து OTTயில் வெளியாகியுள்ள ஜெய்பீம் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியில் இந்தி பேசும் ஒருவரை நடிகர் பிரகாஷ்ராஜ் அறைவது போன்ற ஒரு காட்சி அமைந்துள்ளதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 1990களில் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆண்கள் மீது காவல்துறையினரால் பொய் வழக்குப் போடப்பட்ட உண்மை சம்பவத்தை கருவாகக் கொண்டு இயக்குநர் ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க இந்த வழக்கை நடத்தும் 'சந்துரு' என்ற வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ் வட இந்தியர் தோற்றத்தில் நடித்திருக்கும் ஒருவரை "தமிழில் பேசு" என்று கன்னத்தில் அறைவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே தமிழ் மீது அக்கறை கொண்டு இருப்பது போல் ரசிகர்களிடம் காட்டிக்கொள்ளும் இந்த திரைப்படத்தின் இந்த காட்சி தெலுங்கு டப்பிங்கில் இந்தி பேசுபவரை "தெலுங்கில் பேசு" என்று கூறுவது போலவும், ஆனால் இந்தியில் மட்டும் "உண்மையைப் பேசு" என்று கூறுவது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சி தமிழகத்தில் இந்தி மொழி பேசுபவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகவும் காலம் காலமாக இந்தி எதிர்ப்பை மட்டுமே காரணம் காட்டி அரசியல் செய்து வரும் தமிழக ஆளும் கட்சி திமுகவுக்கு ஐஸ் வைக்கும் முயற்சியிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சூர்யா இந்த படத்தின் மூலம் அதிக லாபம் பெற வேண்டும் என்பதற்காக இந்த படத்தை இந்தியிலும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் பல வட இந்திய மாநிலங்களில் பணிபுரிந்து வருகின்றனர். மும்பையின் நாத்தங்காய் போன்ற சில இடங்களில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அங்கு தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இடங்களில் தமிழர்களும் இந்தி மற்றும் பிற மொழி பேசுபவர்களும் நல்லிணக்கமாக வாழ்ந்து வரும்போது அதை கெடுக்கும் வகையில் இந்த படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும் இந்தியில் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்தவர்கள் அதிலும் இந்தி பேசுபவரை அறைவது போன்ற காட்சியை வைக்காமல் மாற்றியிருப்பது சூர்யாவின் விஷமத்தனத்தை காட்டுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். வசூல் தான் முக்கியம் என்று முடிவு செய்த பின் படத்தில் சமூக நீதிக் கருத்துக்களுக்கு என்ன என்ற விமர்சனம் எழுவதையும் காண முடிகிறது. தமிழில் பேச சொல்லி பிரகாஷ்ராஜ் அந்த காட்சியை கன்னடர்கள் பார்த்தால் அவர் தான் முதல் அறை விழும் என்பது போன்ற நக்கல் விமர்சனங்களும் எழுந்துள்ளன. நடிகர்கள் சூர்யா பிரகாஷ் ராஜ் இருவருமே இந்தி பேசும் பெண்களை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு விஷயத்தில் முந்தைய ஆட்சியில் போராளியான சூர்யா தற்போதைய ஆட்சியில் கள்ள மௌனம் சாதிப்பதும் குறிப்பிடத்தக்கது.
Source :Twitter
r