Kathir News
Begin typing your search above and press return to search.

வெளுத்து வாங்கிய இந்துக்கள் - தீபாவளி உபதேசத்தை சுருட்டி ஓட்டம் பிடித்த விராத் கோலி!

வெளுத்து வாங்கிய இந்துக்கள் - தீபாவளி உபதேசத்தை சுருட்டி ஓட்டம் பிடித்த விராத் கோலி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Nov 2021 2:50 AM GMT

இந்து மத பண்டிகைகள் என்றால் வாய்க்கிழிய உபதேசம் செய்வதும், மற்ற மத பண்டிகைகளுக்கு கண்டும் காணாமல் கப்சிப் என ஆகி விடுவதும் பிரபலங்கள் பல வருடங்களாக இந்தியாவில் செய்து வரும் அறமற்ற செயல்களாகும்.

அவ்வகையில், பெரும்பான்மை இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என கடந்த வருடங்களில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி கடுமையான பிரச்சாரங்களை செய்து வந்தார். இதற்கு இந்துக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, "தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என இந்துக்களுக்கு தினமும் டிப்ஸ் கொடுக்க போகிறேன்!" என ஒரு வீடியோவை விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதற்கு இந்துக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இந்து மத பண்டிகைகளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என எங்களுக்கு தெரியும், முதலில் கிரிக்கெட் போட்டியில் ஒழுங்காக விளையாடி வெற்றி பெறும் வழியை பாருங்கள் என விராத் கோலியை இந்தியர்கள் வெளுத்து வாங்கினர்.

இச்சம்பவங்களின் தொடர்ச்சியாக தன் அதிகபிரசங்கித்தனத்தை உணர்ந்துக்கொண்ட விராத் கோலி, இந்த வருடம் தீபாவளி வாழ்த்தில் உபதேசம் ஏதும் செய்யாமல் "அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்" என்று மட்டும் சொல்லி தன் வாழ்த்து செய்தியை முடித்துக்கொண்டார்.

இந்துக்களுக்கு மட்டுமே எப்போதும் உபதேசம் செய்யும் பிரபலங்களுக்கு இது மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. தேவையில்லாமல் இந்துக்களின் பண்டிகைகள், பழக்கவழக்கங்களை சீண்டினால் இனி தப்பிக்க முடியாது என இணையவாசிகள் கொதித்து எழுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News