Kathir News
Begin typing your search above and press return to search.

ஆயுதபடை காவலர் தற்கொலை - அதிகாரிகள் விடுப்பு தராமல் இழுத்தடித்த காரணமா?

ஆயுதபடை காவலர் தற்கொலை - அதிகாரிகள் விடுப்பு தராமல் இழுத்தடித்த காரணமா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  22 Dec 2021 6:30 AM IST

ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உயர் அதிகாரிகள் அவர் சிகிச்சைக்கு விடுமுறை தராமல் இழுத்தடித்தது காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிஷ்பாஷா, 26 வயதான இவர் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். சென்னை கீழ்பாக்கம் குட்டியப்பன் தெரு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருடன் இன்னும் பிற ஆயுதப்படை காவலர்களும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று சக காவலர்கள் பணியை முடித்து வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சக காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ச்சியில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சாதிக் பாஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரின் உடல் கைப்பற்றப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த அறையை சோதனையிட்டதில் தற்கொலை செய்வதற்கு முன்பாக சாதிக் பாஷா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனவும் மற்றுமொரு கடிதத்தில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற மருத்துவ விடுமுறை வழங்க வேண்டும் என காவல்துறை உயரதிகாரிக்கு சாதிக் பாஷா எழுதி இருப்பதும் தெரிய வந்தது, இதன் அடிப்படையில் அவரது தற்கொலைக்கு காரணம் உயர் அதிகாரிகள் விடுப்பு தராமல் இருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News