Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது - எச்சரிக்கும் தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு தலைவர்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது - எச்சரிக்கும் தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு தலைவர்
X

Mohan RajBy : Mohan Raj

  |  31 Dec 2021 6:00 AM IST

சென்னை நகரம் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி கூறியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதிமணி ஆய்வு செய்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, "திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் பயன் என்னவென்றால் வீடுகளில் பயன்படுத்தி எறியப்படும் குப்பைகள் 60 சதவிகிதம் மக்கும் குப்பைகளாகவும், 40 சதவிகிதம் மக்காத குப்பைகளாகவும் இருக்கும். பயன்படுத்துவோர் அதனை பிரித்து கொடுத்தால் சுலபமாக வேலை முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை எனில் திடக்கழிவு மேலாண்மை செய்வது சிரமம்.


சென்னையை பொருத்தவரை இந்த முறையில் வெறும் 23 சதவிகிதம் மட்டுமே பெயரளவில் நடைபெறுகிறது, இதனை கடந்த முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அறிக்கையாக வழங்கினேன்.


இதே முறை சென்னையில் தொடர்ந்தால் கடல் நீர் மட்டம் உலகமயமாக்குதல் பிரச்சினையால் உயரும் இதற்கு திடக்கழிவு 16 .சதவிகிதம் பங்களிப்பு உள்ளது, இதனால் கடல் பகுதியை ஒட்டிய சென்னையில் பாதி கடலுக்குள் மூழ்கும் ஆபத்து உள்ளது" என எச்சரித்தார்.

Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News