டோங்கா நாட்டில் வெடித்த எரிமலை: சென்னையில் ஏற்பட்ட அதிர்வு!
By : Thangavelu
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா நாட்டின் கடல் பரப்பில் திடீரென எரிமலை வெடித்தது. இதனால் அந்த நாட்டில் சுனாமி உருவாகியது. இது சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மற்ற கடல் பகுதிகளில் அதிர்வு ஏற்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் குட்டி நாடான டோங்கா, பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இங்கு ஹங்காஹபாய் மற்றும் ஹங்காடோங்கா தீவுகளில் எரிமலை வெடிப்பு அவ்வப்போது ஏற்படும். மேலும், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 300 அடி உயரமுள்ள ஒரு எரிமலை இருக்கிறது. ஆனால் கடலுக்கு அடியில் 5,900 அடி உயரமும், 20 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியது. இதன் எதிரொலியாக டோங்காவில் உள்ள குட்டித் தீவுகளையும் சுனாமி அலையின் தாக்கம் இருந்தது. இதனால் பல நாடுகளில் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தது.
இதன் எதிரொலியாக பல்வேறு நாடுகளிலும் சுனாமி அலையின் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இது நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா, அதே போன்று இந்தியாவில் உள்ள சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இது சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில அதிர்வு உணரப்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Source, Image Courtesy: Dinamalar