Kathir News
Begin typing your search above and press return to search.

பாதிரியார்களால் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தப்பட்ட விவகாரம் - பகிரங்க மன்னிப்பு கேட்ட போப்

பாதிரியார்களால் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தப்பட்ட விவகாரம் - பகிரங்க மன்னிப்பு கேட்ட போப்

Mohan RajBy : Mohan Raj

  |  12 Feb 2022 9:00 AM GMT

சிறுவர்கள் மீதான பாலியல் தொல்லை விவகாரத்தில் முன்னாள் போப் பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.


இத்தாலி நாட்டின் கத்தோலிக்க தேவாலய தலைமையகமான வாடிகனில் கடந்த 1980'ஆம் ஆண்டு தேவாலயத்தில் இருந்த பாதிரியார்கள் சிலரால் அங்குள்ள குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்ட செய்தி வெளியானது, இது உலக அளவில் பெரும் கண்டனத்தை பெற்றது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தொடர்ந்து கத்தோலிக்க தேவாலய நிர்வாகம் மீதும் சர்ச்சை எழுந்தது. அந்த சமயத்தில் தேவாலயத்தின் போப்பாக பதவி வகித்தவர் 16ஆவது பெனடிக்ட் 94 வயதான இவர் தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில் கூறியதாவது, 'தான் தலைமை போப்பாக பதவி வகித்த காலகட்டத்தில் நடந்த இந்த தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கோருவதாக' அவர் தெரிவித்துள்ளார், மேலும் சில அத்துமீறல் தொடர்பாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கில் பெனடிக்ட் வயோதிகம் காரணமாக ஆஜராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இதனால் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் போட்டுக் காண்பிக்கப்பட்டது.


கடந்த 2013'ஆம் ஆண்டு பெனடிக்ட் போப் பதவியில் இருந்து விலகிய பொழுது 1980ஆம் ஆண்டு தேவாலய வளாகத்தில் மீது பாலியல் அத்துமீறல் நடப்பது தெரிந்தும் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது இதில் குறிப்பிடத்தக்கது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News