Kathir News
Begin typing your search above and press return to search.

"எங்களோடு போராட யார் இருக்கிறார்கள்?" உருக்கமான வீடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

எங்களோடு போராட யார் இருக்கிறார்கள்? உருக்கமான வீடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 Feb 2022 6:45 PM IST

"எங்களுடன் இணைந்து ரஷ்யாவுடன் போராட யார் இருக்கிறார்கள்? இதுவரை அப்படி யாரையும் நான் பார்க்கவில்லை" என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நள்ளிரவு வெளியிட்ட வீடியோவில் மக்களிடம் மிக உருக்கமாக உரையாற்றியுள்ளார்.


அந்த வீடியோ பதிவில் உக்ரைன் அதிபர் கூறியுள்ளதாவது, "ரஷ்யா படையெடுத்து வந்த முதல் நாளில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள் பொதுமக்கள் என இதுவரை 130 பேர் பலியாகி உள்ளனர், மேலும் 306 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் எங்களோடு இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போராட யார் இருக்கிறார்கள்? இதுவரை அப்படி யாரையும் நான் பார்க்கவில்லை, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்க யாரும் தயாராக இல்லை எல்லோரும் ரஷ்யாவை எதிர்க்க பயப்படுகிறார்கள்" என்றார்.


"ரஷ்யாவோடு போராட நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம், ரஷ்யாவின் நாசகார படைக்கும் நகருக்குள் நுழைந்து விட்டது. மக்கள் ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ரஷ்யா முதல் இலக்காக குறி வைத்துள்ள நானும் எனது குடும்பமும் பொதுமக்களோடு தான் இருக்கிறோம ரஷ்யா உக்ரைன் அரச தலைவரை வீழ்த்தியதன் மூலம் அரசியல் ரீதியாக அழிக்க விரும்புகிறார்கள்" என ஜெலன்ஸ்கி உருக்கமாக கூறியுள்ளார் அந்த வீடியோவில்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News