மருத்துவம் படிக்க 'உக்ரைனை' இந்திய மாணவர்கள் தேர்வு செய்வது ஏன்?
By : Thangavelu
உக்ரைனில் இந்திய மாணவர்கள் பெரும்பாலானோர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இதில் ஹரியானா, பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட மாணவர்களே அதிகம் என கூறப்படுகிறது.
உக்ரைன் நாட்டில் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்) உள்ளிட்டவை இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் உலக சுகாதார கவுன்சில், ஐரோப்பா, இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும், அங்கு படிப்பதற்கான செலவு மிக, மிக குறைவாக உள்ளது. இதன் காரணமாகவே இந்திய மாணவர்கள் பலர் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் நாட்டை தேர்வு செய்கின்றனர்.
இந்தியாவில் பிற மாநிலங்களில் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு சுமார் 12 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய வேண்டும். படிப்பு முடிப்பதற்குள் 50 முதல் 60 லட்சம் செலவாகும். இதுவே உக்ரைனில் படிக்கும்போது ஆண்டுக்கு 4 லட்சம் மட்டுமே செலவாகும். இதனால் படிப்பு முடிப்பதற்குள் 15 முதல் 20 லட்சம் ரூபாயில் முடித்துவிடலாம். இதனால்தான் உக்ரைன் நாட்டை இந்திய மாணவர்கள் வெகுவாக தேர்வு செய்கின்றனர்.
Source: Dinamalar
Image Courtesy: SGT University