இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!
கடந்த 1999ம் ஆண்டு காத்மண்டுவில் இருந்து புறப்பட்ட இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளில் மிகவும் முக்கியமானவராக கருத்தப்பட்ட ஜாகூர் இப்ராஹிம் என்பவர் தற்போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
By : Thangavelu
கடந்த 1999ம் ஆண்டு காத்மண்டுவில் இருந்து புறப்பட்ட இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகளில் மிகவும் முக்கியமானவராக கருத்தப்பட்ட ஜாகூர் இப்ராஹிம் என்பவர் தற்போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் மாதம் 179 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் நேபாள தலைநகரான காத்மண்டுவிலிருந்து டெல்லிக்கு விமானம் புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் புகுந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் விமானத்தை கடத்தி சென்றனர். அந்த கடத்தல் விமானத்தை தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி சென்றனர். இதன் பின்னர் ஜெய்ஷ்இமுகது என்கின்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் உள்ளிட்ட சிலரை விடுவித்தால், விமானத்தை விடுவிப்பதாக பயங்கரவாதிகள் நிபந்தனையை விதித்தனர். இந்த சம்பவம் இந்தியாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சியடைய செய்தது.
பயணிகள் உயிர்தான் முக்கியம் என்று கருதிய இந்திய அரசு 3 பயங்கரவாதிகளையும் விடுவித்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இந்த சம்பவத்திற்கு மிகவும் முக்கியமானவராக கருதப்படும் ஜாகூர் இப்ராஹிம் என்பவர் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் ஜாகித் அகுந்த் என்ற பெயருடன் பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பர்னிச்சர் கடையில் நுழைந்த மர்ம கும்பல் ஜாகூர் இப்ராஹிமை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். கொலையானது விமானத்தை கடத்தியவர் என கூறப்படுகிறது. இது பற்றி கராச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: Dinamalar
Image Courtesy: News Track