தைப்பூச திருவிழாவுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்? தமிழர்களை உலகளவில் பெருமைப்படுத்திய சிங்கப்பூர்!
By : Thangavelu
தைப்பூச திருவிழாவை யுனெஸ்கோவின் பாரம்பரிய கலாசாரங்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு சிங்கப்பூர் அரசு தேர்வு செய்திருப்பது தமிழர்களை உலகளவில் தலைநிமிர செய்துள்ளது.
கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலக நாடுகளின் கலாசார, பாரம்பரிய பெருமைகளுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது. அதன்படி யுனெஸ்கோவின் அங்கீகாரத்தை பெறுகின்ற வகையில் தமிழர்களின் பாரம்பரியமான தைப்பூச திருவிழா உட்பட 10 சிறப்பு நிகழ்வுகளை சிங்கப்பூர் அரசு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் தவறாமல் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்பார்கள். முருக பெருமானுக்கு காவடி எடுத்து, மொட்டை அடித்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்துவர். இத்திருவிழாவை உலகளவில் தெரியும்படி தைப்பூசத்திற்கு யுனெஸ்கோவின் பாரம்பரி கலாசார அங்கீகாரம் கிடைக்கும்பட்சத்தில் மீண்டும் உலகளவில் கவனத்தை பெறும். இதனால் வெளிநாடுகளில் இருந்து பலரும் தைப்பூசத்திருவிழாவை காண்பதற்கு சிங்கப்பூர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source, Image Courtesy: Dinamalar