இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணையின் சோதனைக்கே மிரண்டு போன பாகிஸ்தான்!
By : Thangavelu
இந்திய ஏவுகணை சோதனை செய்ததில் பாகிஸ்தான் நாட்டில் சுமார் 124 கி.மீ., தூரத்தில் விழுந்துள்ளதாக அந்நாடு குற்றம்சாட்டியிருந்தது. இது தொடர்பாக கராச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் விமானப்படை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார், கடந்த 9ம் தேதி மாலை 6.50 மணிக்கு இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலம், சிறுசா நகரத்தில் இருந்து ஏவப்பட்ட அதிவேக ஏவுகணை பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நுழைந்து மியா சானு என்கின்ற இடத்தில் விழுந்தது.
இது பற்றி பாகிஸ்தான் ராணுவம் சோதனை நடத்தியதில் அது சூப்பர் சோனிக் வகை ஏவுகணையை சேர்ந்தது என்று குறிப்பிட்டார். நல்ல வேலை ஏவுகணையில் எவ்வித ஆயுதங்களும் இல்லை, இருந்திருந்தால் பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கும் என்றார்.
இந்நிலையில், இந்த வகை ஏவுகணை குறித்து சில அறிந்தவைகளை காண்போம்; பாகிஸ்தானில் இந்திய ஏவுகணை 124 கி.மீ., விழுந்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு பதிலடி அளிக்கப்படும் என தெரிவித்தது. இதற்கு இந்தியா சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கு என்றது.
மேலும், பாகிஸ்தானில் விழுந்தது பிரம்மோஸ் ஏவுகணையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அது சென்ற பாதையின் வழித்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சூப்பர்சோனிக் புரோஜெக்டைல் தன்னுடைய எல்லைக்குள் வந்ததாக பாகிஸ்தானும் கூறியுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானும் இது போன்ற ஏவுகணையை இடைமறிக்க முடியவில்லை என்று தெரிகிறது. மேலும், ஏவுகணை விழுந்ததில் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது நமக்கு படம் கிடைத்துள்ளது. இதில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண பரிசோதனைக்கே பாகிஸ்தான் அலறி துடிக்கிறது தெளிவாக தெரிகிறது. இன்னும் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டிருந்தால் மரண பீதியில் பாகிஸ்தான் இருந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Source, Image Courtesy: Facebook