Kathir News
Begin typing your search above and press return to search.

ஏப்ரல் மாத ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் எப்பொழுது? - தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்

ஏப்ரல் மாத ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் எப்பொழுது? - தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்

Mohan RajBy : Mohan Raj

  |  19 March 2022 10:45 AM GMT

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் வரும் திங்கட்கிழமை முதல் விநியோகிக்கப்படுகின்றன.


திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் வரும் திங்கள்கிழமை முதல் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இதில் ஏப்ரல் மாத டிக்கெட்டுகள் திங்கள்கிழமையும், மே மாத டிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமையும், ஜூன் மாதத்தில் புதன்கிழமையும் வெளியிடப்படுகின்றன.


திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தில் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதே இணையதளத்தில் தங்கும் வசதிக்கான டிக்கெட்டுகளும் கிடைக்கும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News