Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் - எப்படி வந்தது?

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் - எப்படி வந்தது?

Mohan RajBy : Mohan Raj

  |  23 March 2022 1:15 PM GMT

டெல்லி இந்திராகந்தி சர்வதேச விமான நிலையத்தின் பரபரப்பான ஓடுபாதையில் இஸ்லாமியர்களின் வழிபாடு என அழைக்கப்படும் இரண்டு சூஃபி பாபா'க்களின் ஓய்விடம் பயணிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


டெல்லியில் சர்வதேச விமான நிலையத்திற்குள் விமான ஓடுபாதைகள் அருகில் இரண்டு சூஃபிகளின் ஓய்வு இடம் பல ஆண்டுகளாக உள்ளது என கூறப்படுகிறது, ஆனால் இது பயணிகளை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த ஆலயம் எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியாது ஆனால் இது நீண்ட நாட்களாக இருந்ததாகவும் இரண்டு முஸ்லிம் துறவிகள் தற்பொழுது இருக்கும் விமான நிலையத்திற்குள் இருந்தார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


விமான நிலையத்தின் நடுவில் ஓடுபாதை தர்பார் 10/28 க்கு அருகில் அமர்ந்துள்ள டெர்மினல்களில் இருந்து தெளிவாக தெரிகிறது இந்த இஸ்லாமிய வழிபாட்டுத்தளம். மேலும் சுவாரசியமாக இந்திய விமான நிலைய ஆணையம் சரக்கு வளாகம் T-2'வில் இருந்து சன்னதிக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை இலவச பேருந்து வேறு அந்த வழிபாட்டு தலத்திற்கு சென்று வர வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஜும்மே ராத் ஆகும், இது சன்னதிக்கு வருகை தந்து அங்கு பிரார்த்தனை செய்யும் மக்களுக்கு இஸ்லாமிய மக்களுக்கு புனிதமான நாளாக கருதப்படுகிறது.


ஆரம்ப காலத்தில் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பரபரப்பாக இல்லாத சமயத்தில் இது வழிபட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது மிகுந்த பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேலையில் இதை வைத்துக் கொள்ளலாமா வேறு எதாவது மாற்றம் செய்லாமா என விமான நிலைய நிர்வாகம் அலோசித்து வருகிறது. இந்த இஸ்லாமிய வழிபாட்டு இடத்தில் ஆண்டுதோறும் 'உர்ஸ்' என்ற ஒரு பெரிய திருவிழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


Source - Opindia.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News