Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய அரசின் சார்பில் கட்டப்பட்ட தமிழ் பண்பாட்டு மையம்: யாழ்ப்பாணத்தில் திறப்பு!

இந்திய அரசின் சார்பில் கட்டப்பட்ட தமிழ் பண்பாட்டு மையம்: யாழ்ப்பாணத்தில் திறப்பு!
X

ThangaveluBy : Thangavelu

  |  29 March 2022 10:40 AM IST

இலங்கை, இந்தியாவின் நட்புறவின் அடையாள சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் பல்வேறு தளங்களை கொண்டு உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் நேற்று (மார்ச் 28) திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் யாழ் மாநகர முதலமைச்சர் வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபையின் உறுப்பினர்கள், வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், கொழும்பில் இருந்து பிரதமர் மஹிந்த, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கம், இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மையத்தை இலங்கை பிரதமர் மஹிந்த மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொளி வாயிலாக திறந்து வைத்தனர்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News