Kathir News
Begin typing your search above and press return to search.

படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தானின் பொருளாதாரம் - அடுத்து இலங்கையின் கதியா?

படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தானின் பொருளாதாரம் - அடுத்து இலங்கையின் கதியா?
X

DhivakarBy : Dhivakar

  |  21 April 2022 7:25 PM IST

ஏற்றுமதிகள் அதிகரித்தும்! இறக்குமதிகள் குறைந்தும்! காணப்படும் இந்தியாவின் பொருளாதாரம் உச்சத்தைத் தொட காத்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானின் பொருளாதார நிலை பரிதாபமாக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


முக்கியமாக அண்டை நாடான பாகிஸ்தானின் நிலை மிகவும் மோசம்! அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் பெற்று, நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பாகிஸ்தான் தவித்து வருகிறது. மோசமான பொருளாதாரத்தின் அறிகுறியாக, தற்போது பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 185 ரூபாய் என்றுள்ளது.


உலக நாடுகளில் இருந்து நிதி உதவி கிடைக்காமல் பாகிஸ்தான் தடுமாறி வருகிறது. சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் நிபந்தனைகளுடன் கடன் வழங்க முன் வந்தாலும், அது போதுமானதாக இல்லை.


நமது மற்றொரு அண்டை நாடான இலங்கையிலும், இதைவிட மோசமான பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டு மக்களே வீதியில் இறங்கி போராட தொடங்கிவிட்டனர்.

ஆனால் இந்திய நாட்டிலோ! நாம் ஐ.பி.எல், ஆர்.ஆர்.ஆர் கே.ஜி.எஃப் என்று பொழுதுபோக்கை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இதுவே ஒரு தக்க உதாரணமாகும். 'இந்தியாவின் பொருளாதாரம் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தலை நிமிர்ந்தே தான் வீர நடை போடும்' என்று.

J Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News