ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய இந்தியா - எதில் தெரியுமா?
By : Dhivakar
இந்தியா கடந்த 2021'ஆம் ஆண்டு 76.6 பில்லியன் டாலர் தொகையை ராணுவத்திற்கு செலவிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 0.9 சதவீதம் அதிகமாகும்.
ஒரு நாட்டின் பாதுகாப்பு அந் நாட்டின் ராணுவத்தையே சார்ந்ததாகும். ராணுவம் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த நாடும் பாதுகாப்பாக இருக்கிறது என்று அர்த்தம். அந்த வகையில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக நமது ராணுவ துறையை முதன்மையாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராணுவத்திற்கும் கூடுதலான நிதிகளும் சமீப காலங்களில் ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகள் ராணுவத்திற்கு செலவிடும் நிதி எவ்வளவு என்பது குறித்து, 'ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி இன்ஸ்டிட்யூட்' என்ற அமைப்பு முக்கியப் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த ஆண்டில் 801 பில்லியன் டாலர் செலவு செய்து, உலகில் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இரண்டாமிடத்தில் சீனா, கடந்த ஆண்டில் ராணுவத்துக்காக 293 பில்லியன் டாலர் செலவிட்டிருக்கிறது.
மூன்றாம் இடத்தில் இந்தியா, இந்தியா கடந்த ஆண்டு ராணுவத்துக்குச் செலவிட்ட தொகை 76.6 பில்லியன் டாலர். இது முந்தைய ஆண்டைவிட 0.9 சதவிகிதம் அதிகம். அதேசமயம் 2012-ம் ஆண்டிலிருந்து ஒப்பிட்டுகையில் இந்தியா ராணுவத்துக்குச் செலவிடும் தொகை 33 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் இங்கிலாந்து மற்றும் ரஷ்யா இடம்பெற்றுள்ளது.
Image : The Print