இலங்கையில் பொங்கி எழுந்த மக்கள்! ராஜபக்சே வீட்டுக்கு தீ வைப்பு, குடும்பத்துடன் தலைமறைவு!
By : Thangavelu
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு சிக்கியுள்ளது. இதுனால் அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்ற பிரச்சினையை அந்நாடு சந்திக்க காரணமாக சரியான நிர்வாகம் செய்ய முடியாத ரஜபக்சே குடும்பமே காரணம் என அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இரண்டு பேரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் குதித்துள்ளனர். அதே போன்று நேற்று முதல் போராட்டம் மிகத்தீவீரம் அடையத்துவங்கியது.
கலவரத்தில் ஈடுபட்ட மக்கள் மீது ஆளும் கட்சி எம்.பி.க்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொங்கி எழுந்த மக்கள் அந்த எம்.பி.யை அடித்துக் கொன்றனர். அதன் பின்னர் முக்கிய கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் கடைகளை சூறையாடி வருகின்றனர். அதே போன்று இலங்கை பிரதமர் ராஜபக்சேயின் வீட்டினையும் தீ வைத்து எரித்தனர். இதனால் வீடுகளில் பதுங்கியிருந்த அவரது உறவினர்கள் அங்கிருந்து தப்பித்து வேறு இடத்திற்கு சென்றதாக இலங்கை செய்திகள் தகவல் தெரிவிக்கிறது. அதே போன்று இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், ஆளுங்கட்சியினர் தப்பி ஓடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களில் போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். இதனால் இலங்கையில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
Source, Image Courtesy: Dinamalar