Kathir News
Begin typing your search above and press return to search.

'திராவிட மடல் ஆட்சி' என முதல்வர் விளம்பரப்படுத்தும் வேளையில் மதுரை மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் - ஏன்?

திராவிட மடல் ஆட்சி என முதல்வர் விளம்பரப்படுத்தும் வேளையில் மதுரை மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் - ஏன்?

Mohan RajBy : Mohan Raj

  |  29 May 2022 2:30 PM GMT

மதுரை மேயர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தாழ்த்தப்பட்ட பணியாளர்களை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வாய்த்த காரணத்தினால் மதுரை மேயர் மீது புகார் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


மதுரை மாநகராட்சியில் மண்டலம் 36 ல் 59 வார்டுக்கு உட்பட்ட ரயில்வே காலனி பகுதியில் நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணியை மதுரை மேயர் இந்திராணி பார்வையிட்டார் இந்த சிறப்பு தூய்மைப்பணி நடவடிக்கையின் கீழ் வாய்க்கால் தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் தொட்டியில் அடைப்பை நீக்கி பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அளிக்காமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மேயர் முன்னிலையிலேயே தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் இந்த விவகாரம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.


அந்த புகாரில், 'மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில் மேற்கொண்ட தூய்மை பணியின் போது பட்டியலின தூய்மைப் பணியாளர்கள் காலில் காலணி அணியாமலும், கையுறை அணியாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதிகாரி முன்பு இச்சம்பவம் நடந்துள்ளதால் வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையில் மனித உரிமைக்கு எதிரான செயல் இது, இந்த நடவடிக்கையில் தீண்டாமை அரங்கேறியுள்ளது.


மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை மத்திய அரசு சார்பில் விதிக்கப்பட்ட தடை சட்டம், உச்ச நீதிமன்ற உத்தரவு என எதையுமே பின்பற்றவில்லை என்பதால் மதுரை மேயருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது தினங்களுக்கு முன்புதான் திராவிட மாடல், சமூகநீதி என பிரதமர் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய சமயத்தில் மதுரையில் மேயர் முன்னிலையிலேயே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News