Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்த மக்கள் - உயிருக்கு பயந்து தப்பியோடிய ராஜபக்சே குடும்பம்

இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்த மக்கள் - உயிருக்கு பயந்து தப்பியோடிய ராஜபக்சே குடும்பம்
X

ThangaveluBy : Thangavelu

  |  9 July 2022 2:26 PM GMT

இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் நிலையில் பொதுமக்கள் அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கொழும்பு நகர வீதிகளில் கூட்டம், கூட்டமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று அதிபர் மாளிகையில் திடீரென்று புகுந்த மக்களை கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீசார் கலைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

இலங்கையில் உணவு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பலர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று வரும் நிலையில், உள்ளூரில் வசிக்கும் மக்கள் தங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 8) இரவு பலரும் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் புறநகர்ப் பகுதிகளிலிருந்து தலைநகர் கொழும்புவில் உள்ள போராட்ட பகுதிகளுக்கு மக்கள் நடந்தே வந்தனர். அதோடு நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவே முழு காரணம் என்றும் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்கொடி தூக்கினர்.

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களில் காவல்துறையினர் ஊரடங்கை அமல்படுத்தினர். இதனை சட்ட விரோத நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதன் பின்னர் சனிக்கிழமை அன்று ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டது.

மேலும், கலவரம் நடக்காமல் இருப்பதற்காக ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதிபர் இல்லம் மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் பாதைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் லட்சக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை சுற்றி வளைத்தனர். சிலர் மாளிகையின் உள்ளே புகுந்து அங்கிருந்த பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கிருந்த அதிபர் கோட்டாபய தப்பியோடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: kumudam

Next Story
கதிர் தொகுப்பு
Trending News