இந்திய தேயிலை இறக்குமதியை அதிகரித்த ரஷ்யா: காரணம் என்ன தெரியுமா!
By : Thangavelu
கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் இருந்து தேயிலை இறக்குமதியை ரஷ்யா அதிகரித்துள்ளதால் தேயிலை விலையும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்கின்ற நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. 2021-2022ம் ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 3.25 கோடி கிலோ தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்திருக்கிறது. இதில் ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் காரணமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது சற்று தடைப்பட்டது.
இந்நிலையில், ஆர்கானிக் பசுந்தேயிலை மிகவும் பிரகாசமான மற்றும் விறுவிறுப்பான சுவை கொண்டதாக அரியப்படுகிறது. தற்போது ரஷ்யாவில் உள்நாட்டு தேவை அதிகரித்திருக்கும் சூழலில் கடந்த இரண்டு வாரங்களாக இந்திய தேயிலை இறக்குமதியை அதிகரித்துள்ளது. இதனால் பசுந்தேயிலையின் விலை 50 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. மேலும், தரசான சி.டி.சி. தேயிலையின் விலையும் 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்திய தேயிலை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar