தினமும் ஆர்வத்துடன் யோகா கற்கும் செஸ் ஒலிம்பியாட் வீரர்கள்!
By : Dhivakar
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, தினமும் யோகா பயிற்சி கற்று கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா அழகிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. பின் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பல்வேறு நாடுகளிலிருந்து வந்த வீரர்கள், இருபத்தியோரு நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போட்டியில் பங்கேற்கும் வீரர்களை கவனித்துக் கொள்வதில் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் செஸ் போட்டி மனநலம் மற்றும் புத்தி சார்ந்து இருப்பதால், வீரர்களுக்கு யோகா மற்றும் தியானம் கற்றுத்தர இயற்கை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வீரர்களும் யோகா பயிற்சிகளை ஆர்வத்துடன் பயிற்சி செய்வதாக செய்திகள் வெளிவருகின்றன.