Kathir News
Begin typing your search above and press return to search.

சுற்றுச்சூழலுக்கு உகந்த எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை குறித்து பெட்ரோலிய மந்திரி கூறிய தகவல் என்ன?

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்படும் பெட்ரோலிய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்

சுற்றுச்சூழலுக்கு உகந்த எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை குறித்து பெட்ரோலிய மந்திரி கூறிய தகவல் என்ன?

KarthigaBy : Karthiga

  |  11 Aug 2022 10:15 AM GMT

கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலில் கலந்து பயன்படுத்தினால் அது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது.மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும். இந்த நிலையில் பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .

அவர் கூறியதாவது:-

10 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை இந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்தோம்.ஆனால் அதற்கு முன்பே ஜூன் மாதம் இலக்கை நிறைவேற்றி விட்டோம்.

அதுபோல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை இந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்பே அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் சில குறிப்பிட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விற்கப்படும். படிப்படியாக அதிகரித்து 2025-ஆம் ஆண்டுக்குள் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் அனைத்து இடங்களிலும் விற்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News