Kathir News
Begin typing your search above and press return to search.

ஆர்.எஸ்.எஸ் சார்ந்த நிகழ்ச்சி நடத்தி தனியார் பள்ளி மீது நடவடிக்கை? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதென்ன?

ஆர்.எஸ்.எஸ் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தியதாக கூறப்படும் சென்னை தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார்.

ஆர்.எஸ்.எஸ் சார்ந்த நிகழ்ச்சி நடத்தி தனியார் பள்ளி மீது நடவடிக்கை? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதென்ன?

KarthigaBy : Karthiga

  |  2 Dec 2022 11:00 AM GMT

தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் 15 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 2 லட்சத்து 50 ஆயிரத்து 731 பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புமணி, தொழில்துறை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேற்று மாலை வெளியிட்டனர். தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் 1500 பேருக்கு மாதம் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் இந்த தேர்வில் 967 அரசு பள்ளி மாணவர்களும், 123 அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களும், 41 தனியார் பள்ளி மாணவர்களும் என 1,500 பேர் மதிப்பெண் அடிப்படையில் ஊக்க தொகையை பெற இருக்கின்றனர்.


முதல் இடத்தில் நாகையை சேர்ந்த அபிநயா என்ற மாணவி 97 மதிப்பெண் பெற்றுள்ளார். 1500 பேரின் பட்டியல் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் மதிப்பெண்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் பின்னர் அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-


சென்னையில் ஒரு பள்ளியில் ஆர்.எஸ். எஸ் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் விளக்கம் கேட்டு அந்த பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச புத்தக கண்காட்சி என்பது அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளும் தளமாகதான் நாங்கள் பார்க்கிறோம். இதுவரை 18 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் கலந்து கொள்வதாக தெரிவித்து இருக்கின்றனர்.நம்முடைய தமிழ் இலக்கியத்தை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. குறுகிய காலத்தில் இதை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News