“நாடு திரும்ப வேண்டாம்” - ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய வீராங்கனைக்கு மிரட்டல்!
By : Muruganandham
ஈரான் நாட்டுக்கு திரும்ப வேண்டாம் என எச்சரிக்கப்பட்ட ஈரானிய செஸ் வீராங்கனை சாரா காடெம் ஸ்பெயின் வந்தடைந்தார். 25 வயதான காடெம் கடந்த வாரம் ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்றதற்காக கூறப்படுகிறது. அவர் கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடந்த FIDE உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.
போட்டியைத் தொடர்ந்து, காடெம் வீட்டிற்கு திரும்புவதை எதிர்த்து ஈரானில் இருந்து பல அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோரையும் அதிகாரிகள் அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சாராவின் பெற்றோர்களும், உறவினர்களும் ஈரான் அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சி சாரா தற்போது ஸ்பெயினில் தஞ்சம் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது.
Input From: FirstPost