Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை, மிரளப்போகும் சீனா

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை, மிரளப்போகும் சீனா

Mohan RajBy : Mohan Raj

  |  3 Feb 2023 2:00 PM GMT

சைனா நாடு எல்லையில் இந்தியாவை பார்த்து அதிரும் வகையில் இந்திய பாதுகாப்புத் துறைக்கு அதிநவீன பிரிடேட்டர் டிரோன்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் ஒப்பந்தம் மிக விரைவில் போடப்படுகிறது.

இந்தியாவிற்கும் அண்டை நாடான சீனாவிற்கும் பல ஆண்டு கால உரசல் இருந்துகொண்டே வருகிறது, இந்தியாவின் வளர்ச்சி, பிரதமர் மோடிக்கு உலக நாடுகள் அளித்து வரும் மரியாதை, கொரோனோ காலத்தில் மற்ற உலகநாடுகள் பொருளாதார ரீதியாக இன்னமும் சரியாகாத நிலையில் இந்தியா வீறு கொண்டு எழுந்து வருவது சீனாவிற்கு அச்சுறுத்தலை எழுப்பி வருகிறது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சுமுகமான உறவே கடந்த பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா அதிகம் கொள்முதல் செய்து வருகிறது.

இதனிடையே இந்தியச் சீன எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க ஏதுவாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன டிரோன்களை வாங்கவுள்ளது. இது இந்திய பாதுகாப்புப் படைக்கு மிகப் பெரிய பூஸ்டாக இருக்கும். எல்லையில் இந்தியாவின் கை ஓங்கும்.

3 பில்லியன் டாலர் மதிப்பிலான 30 MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய ட்ரோன்கள் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஆர்வமாக உள்ளன. இது நிறைவேறும் நிலையில் இது இந்தியச் சீன எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் பகுதி தொடங்கிப் பல பகுதிகளில் இந்தியாவின் கண்காணிப்பை வலுப்படுத்த உதவும். கடந்த 5 ஆண்டுகளாகவே இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், தற்போது இந்தியாவே இதில் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த MQ-9B பிரிடேட்டர் ஆயுதமேந்திய டிரோன்கள் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நிச்சயம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். எல்லையில் வீரர்களுக்கு ட்ரோன்கள் நிச்சயம் உதவியாக இருக்கும், அதேநேரம் இது இத்தனை ஆண்டுகள் தாமதமாக என்ன காரணம் என்பது குறித்து அதிகாரிகள் எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. இந்த தொடர்பான அறிவிப்பு முதலில் கடந்த செப். மாதம் வெளியானது. அதன் பிறகு நீண்ட காலமாகவே இரு தரப்பும் இந்த விவகாரத்தில் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும், இறுதி முடிவை எட்டுவதில் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.

இவ்வளவு தூரம் தாமதமாக என்ன காரணம் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சமீபத்தில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்கா சென்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் அமெரிக்காவின் டாப் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் இரு தரப்புமே டிரோன் ஒப்பந்தத்தை விரைவாக முடிக்கவே ஆர்வம் காட்டியுள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரிய பூஸ்ட் என்பதால் இந்த டிரோன்களை முன்கூட்டியே பெறுவதில் இந்தியா ஆர்வமாகவே உள்ளது.

பைடன் நிர்வாகமும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் ஆர்வமாக உள்ளது.. இது அங்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும், அடுத்த ஆண்டு அங்கு அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அரசியல் ரீதியாக இது தனக்கு பாசிட்டிவாக அமையும் என்று நம்புகிறார் பைடன். இதுவே அமெரிக்க நிர்வாகம் இதில் ஆர்வமாக இருக்கக் காரணமாகும். பல்வேறு காரணங்களால் உள்நாட்டில் பைடனுக்கு எதிர்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்தச் சூழலில் இதுபோன்ற பெரிய ஒப்பந்தங்கள் அவரது இமேஜை பூஸ்ட் செய்துகொள்ள உதவும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய ராணுவத்தில் இப்போதும் டிரோன்கள் இருந்தாலும், இது டிரோன் பிரிவை அடுத்த கட்டத்திற்கே எடுத்துச் சென்றுவிடும். இந்த டிரோன்களால் அதிக நேரம் பார்க்க முடியும். மேலும், மற்ற டிரோன்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத பல செயல்களையும் இந்த டிரோன்கள் மூலம் செய்ய முடியும். மேலும், இரவு பகல் என்று எப்போது வேண்டுமானாலும் துல்லியமான வீடியோ பதிவையும் இந்த டிரோனால் தர முடியும். நிலத்தில் இதனால் எந்தளவுக்குப் பயணிக்க முடியுமோ.. அதேபோல பெருங்கடலிலும் இது கண்காணிக்கும் வகையில் எளிதில் மாற்றி அமைக்க முடியும்.

ஏஐ தொழில்நுட்பமும் இதில் இருப்பது கூடுதல் பலம். உளவு, கண்காணிப்பு, ராணுவ ரீதியாக என்று எப்படி வேண்டுமென்றாலும் இந்த டிரோன்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பல்வேறு வழிகளில் இந்த டிரோன்கள் இந்திய ராணுவத்திற்குப் பெரியளவில் உதவுவதாகவே இருக்கும்.

இரு நாடுகளும் இந்த டீலை விரைவில் இறுதி செய்யும் என்று அமெரிக்காவின் ராணுவ விவகாரங்களுக்கான உதவி செயலாளர் ஜெசிகா லூயிஸ் தெரிவித்தார். விரைவில் இதுகுறித்த பல தகவல்கள் கிடைக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News