Kathir News
Begin typing your search above and press return to search.

சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கும் திட்டம் இல்லை - மக்களவையில் மத்திய அரசு விளக்கம்!

சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கும் திட்டம் இல்லை - மக்களவையில் மத்திய அரசு விளக்கம்!

KarthigaBy : Karthiga

  |  29 March 2023 6:45 AM GMT

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பா.ஜனதா உறுப்பினர் சுப்ரத்பகத் சமஸ்கிருதத்தை மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் அலுவல் மொழியாக்க திட்டம் உள்ளதா? என்று கேட்டார் .அதற்கு மத்திய மந்திரி அஜய்குமார் மிஸ்ரா கூறியதாவது:-


இல்லை சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை . இந்திய அரசியல் சட்டத்தின் 343- ஒன்றாவது பிரிவு படி மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் கூறியதாவது:-


தேச விரத சக்திகளும் கடத்தல் காரர்களும் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களையும் போதை பொருட்களையும் பஞ்சாப்புக்கு கடத்த டரோன்களை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இது போல் ஆயுதம் போதை பொருள்கள் கடத்தி வர பயன்படுத்தப்பட்ட டிரோன்கள் பிடிபட்ட சம்பவங்கள் 28 தடவை நடந்துள்ளது. டிரோன்களிடம் இருந்து 175 கிலோ ஹெராயின், 100 கிராம் அபின் , ஒரு 9 எம்.எம் ரக கைதுப்பாக்கி , 7 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன இவ்வாறு அவர் கூறினார். மக்களவையில் ஒரு கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே அளித்த பதில் பின்வருமாறு:-


பருவநிலை தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு இதுவரை உள்நாட்டு நிதி ஆதாரங்களில் இருந்து தான் நிதி பெறப்பட்டது. நிதி தேவையை பூர்த்தி செய்வது சவாலாக உள்ளது இவ்வாறு அவர் கூறினார். கேள்வி நேரத்தில் மதிய உள்துறை இணை மந்திரி நித்யானந்தராய் கூறியதாவது:-


தேசிய அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகை ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீசார் இன்னைக்கு 796 ஆக உள்ளது ஆனால் உண்மையில் 152 போலீசார் உள்ளனர் இந்த விகிதாச்சாரம் பீஹார் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மிகவும் குறைவாக உள்ளது தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீசார் எண்ணிக்கை 171.95 ஆனால் உண்மையில் 154.25 போலீசார் உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News