அதெப்படி கோவிலை தாக்குபவர்கள் எல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்? சீறும் அண்ணாமலை!
By : Kathir Webdesk
கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலைய துறை எதற்கு? அமைச்சர் எதற்கு? என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திருப்பூர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்குள் சமூக விரோதிகள் புகுந்து, சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் கோவில் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதும் தொடர்கிறது.
உண்மையான குற்றவாளிகள் யாரும், கைது செய்யப்படுவதாக தெரியவில்லை.கைது செய்யப்படுபவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி குற்றத்தை நீர்த்து போக செய்யும் முயற்சியே தொடர்வதாக தெரிகிறது.
கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் ஹிந்து சமய அறநிலைய துறை எதற்கு? அமைச்சர் எதற்கு?உடனே உண்மை குற்றவாளிகளை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனியும் இதுபோல கோவில்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால், அதன் எதிர் விளைவுகளுக்கு தி.மு.க., அரசே பொறுப்பு என கூறியுள்ளார்.