Kathir News
Begin typing your search above and press return to search.

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மார்ச் மாதம் அறிமுகம்

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மார்ச் மாதம் அறிமுகம் என்று ஐ.சி. எஃப் பொது மேலாளர் பி.ஜி. மல்லையா தகவல் தெரிவித்துள்ளார்.

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மார்ச் மாதம் அறிமுகம்
X

KarthigaBy : Karthiga

  |  27 May 2023 6:15 PM IST

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் மார்ச் மாதத்திற்குள் புது வடிவில் அறிமுகப்படுத்தப்படும் என ஐ. சி.எப் பொது மேலாளர் பி. ஜி .மல்லையா தெரிவித்தார். இது குறித்து ஐ.சி.எஃப் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா அளித்த பேட்டி :


வந்தே பாரத் ரயில் இந்த ஆண்டு வடிவமைக்கப்பட்டு இந்திய ரயில்வேக்கு ஒப்படைக்கப்படும். இன்று 21-வது ரயில் முழுவதுமாக தயாரிக்கப்பட்டு ரயில்வே இடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ராஜ்தானி ரயில் போல வந்தே பாரத் படுக்கை வசதியுடன் கூடிய ரயில் மார்ச் மாதத்திற்கு அறிமுகப்படுத்தப்படும். வந்தே மெட்ரோ, வந்தே புறநகர் ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது.


வந்தே மெட்ரோவில் ஒரு பெட்டியில் 300 பேர் பயணிக்கலாம். அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்வது போல 100 கிலோமீட்டருக்கு உட்பட்ட நகரங்களுக்கு இடையே இது இயக்கப்படும். 1330 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். தற்போது தயாரிக்க கூடிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. இதை 200 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவது தொடர்பாக ரயில்வே வாரியம் முடிவு செய்யும்.


ரஷ்யா உக்கரின் போரால் உக்கிரைனிலிருந்து வந்தே பாரத் ரயில்களுக்கு தேவையான சக்கரங்கள், எலக்ட்ரிக் உபகரணங்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தி வேகம் சற்று குறைந்துள்ளது. மேலும் 200 படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வே வாரியம் ஆர்டர் செய்துள்ளது. இதில் 80 ரயில்கள் ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.


வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்து இருக்கும். பயணிகளுக்கு விபத்து குறித்து உடனுக்குடன் தகவல்கள் , அலாரம், ரயிலுடன் மோதாமல் இருக்க அலாரம் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. இவ்வாறு ஐ.சி.எப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News