Kathir News
Begin typing your search above and press return to search.

"ஊருக்குள்ள வா பார்ப்போம்" கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை மிரட்டிய திமுக நிர்வாகி!

ஊருக்குள்ள வா பார்ப்போம் கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை மிரட்டிய திமுக நிர்வாகி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 May 2023 10:18 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான குளத்தை தூர்வாருவது தொடர்பாக சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பினார்.

நாகர்கோவில் மாநகராட்சி 14வது வார்டில் உள்ள சுப்பையார் குளம் 46 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்படுகிறதா அல்லது கிணறு வெட்டப்படுகிறதா..? குளம் தூர்வாரப்பட்டால் அந்த மண்ணை கொண்டு கரையை பலப்படுத்த வேண்டும்.

ஆனால் சுப்பையார் குளத்தில் இருந்து JCB இயந்திரம் மூலம் எடுக்கப்படும் மண், டெம்போ மற்றும் டாரஸ் லாரிகளில் மாநகராட்சி எல்லைகளை கடந்து, மாநகராட்சி தூய்மை பணி என்ற பெயரில் மாநகரை புழுதியாக்கி கொண்டு பயணிக்கிறது. என்னதான் நடக்கிறது?

சுப்பையார் குளத்தை தூர்வாரும் ஒப்பந்தத்தை திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவில் இணை செயலாளராக பதவி வகித்து வரும் ஜெகன் என்பவர் நாகர்கோவில் மாநகராட்சி பணிகள் சிலவற்றை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார்.

சம்பந்தப்பட்ட சுப்பையா குளத்தை தூர் வாரும் பணி என்ற போர்வையில் அதிக அளவில் மணல் கொண்டு செல்லப்படுவதாகவும், இது குறித்து மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் ஷாஜி என்பவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

திமுகவைச் சார்ந்த ஒப்பந்ததாரர் ஜெகன் சமூக ஆர்வலர் ஷாஜியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எனக்கு மாநகராட்சி முழுக்க முழுக்க சப்போர்ட் இருக்கு. எங்க தலைமையில் தான் அரசியல். எங்க ஆட்சி தான் நடக்குது.

பதிவு போடறவங்க லைஃப் எல்லாம் எப்படி இருக்கும்னு பார்த்துகிட்டு தான் இருக்கேன். முடிந்தால் ஊருக்குள்ள வா. வந்து பேசு பார்ப்போம் என மிரட்டினார்.

Input From: Updatenews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News