கூட்டு சேர்ந்து கோவில் பணத்தை ஆட்டை போட்ட அதிகாரிகள்!
By : Kathir Webdesk
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா ஆண்டும் தோறும் மிக சிறப்பாக நடந்து வருகிறது. விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு கோவில் குண்டம் தேர்த்திருவிழா வருகிற மார்ச் 29ந் தேதி கிராம சாந்தி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏப்ரல் 2ல் பொங்கல், 3ல் குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடந்தது.
4ந்தேதி அதிகாலை4 மணிக்கு குண்டம் பூ மிதித்தல், மாலை 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்து, 8-ந் தேதி மஞ்சள் நீராடுதலுடன் விழாவுடன் நிறைவு பெற்றது.
திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.
பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல பஸ் வசதி மற்றும் கோவில் வளாகத்தில், குடிநீர், மொபைல் டாய்லெட், பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய தடுப்பு அமைத்தல் போன்ற நடவடிக்கையில் கோவில் நிர்வாகம் செய்தது.
திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்குவது, கடைகளை வாடகைக்கு விடுவது போன்ற வருமானம் தரும் பணிகளை, அறநிலையத் துறையினர் முறையாக செய்யாமல் விட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
கோவிலுக்கு கிடைத்த வருமானத்தில் பொய் கணக்கு காட்டி, கோவில் அதிகாரிகள், தக்கார் என 18 லட்சம் ரூபாயை பதுக்கிவிட்டதாக புகார் கிளம்பியிருக்கு.
ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இது சம்பந்தமாக அந்த அதிகாரிகளிடம் முகத்துக்கு நேராகவே கேட்டுவிட்டனர்.
Input From: Dinamalar