Kathir News
Begin typing your search above and press return to search.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்க்கும் மத்திய அரசின் புதிய திட்டம்

குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் பார்க்கும், புது திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.. அது என்னவென்று பாருங்கள்.

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்க்கும் மத்திய அரசின் புதிய திட்டம்

KarthigaBy : Karthiga

  |  10 Jun 2023 2:15 PM GMT

மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது .தினமும் ரூ.50 முதலீடு செய்தாலே போதுமாம், உங்கள் முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை கிடைக்கும் அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம் தெரிவிக்கிறது. அந்தவகையில், குறுகிய முதலீட்டின் மூலமாக நல்ல லாபத்தை தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் கிராம் சுரக்‌ஷா யோஜனா திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.


இந்த அறிவிப்பு என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலமாக தினமும் ரூபாய் 50 அதாவது மாதத்திற்கு ரூபாய் 1500 ரூபாய் வரை முதலீடு செய்து வந்தாலே முதிர்வு காலத்தில் ரூபாய் 35 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 19 வயது நிரம்பிய அனைத்து இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும்.


இந்த காப்பீட்டுத் தொகை திட்டத்தின் மூலமாக குறைந்தபட்சமாக ரூபாய் 10,000 முதல் அதிகபட்சமாக 10 லட்சம் வரைக்கும் சேமிக்க இயலும் என்கிறார்கள்.அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பொழுது உங்களுக்கு தேவையான கடன் வசதியையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பு, வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், கூடுதல் நம்பிக்கையையும் தந்து வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News