Kathir News
Begin typing your search above and press return to search.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி.. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அலறி துடித்த முதல்வர் ஸ்டாலின்..

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி.. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை அலறி துடித்த முதல்வர் ஸ்டாலின்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Jun 2023 2:50 AM GMT

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய செய்தியாக, அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் எப்படியாவது விசாரிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் அமலாக்கத்துறை அதிகாரிகள் துடித்து வரும் வேளையில், மறுபுறம் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடைபெற்று முடிந்ததா? என்பதுதான் வைரலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் 17 மணிநேர அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு அவர் இரவில் கைது செய்யப்படும் நிலையில் திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி வந்ததால் அவர் ஓமத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் மனைவி கேட்டுக்கொண்டதால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு ஆஞ்சியோ கிராம் செய்ததில் செந்தில் பாலாஜி இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக அறிக்கை தகவல்கள் தெரிவிக்கப்பட்டன அதன் காரணமாக அவருக்கு பைபாஸ் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனால் பைபாஸ் சிகிச்சை அமைச்சருக்கு செய்யப்பட்டு உள்ளது.

காலையிலிருந்து அமைச்சருக்கு பைபாஸ் சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ச்சியான முறையில் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தது இது குறித்து உடனடியான தகவல்களை முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது சுகாதாரத்துறை அமைச்சரிடம் அப்டேட் கேட்டுட்டே இருந்திருக்கிறார். அதேபோல் மறுபுறம் சிகிச்சை முறைகளை அமலாக்கத்துறையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.


இந்தப்பக்கம் அமைச்சருக்கு நல்ல முறையில் சிகிச்சை நடைபெற்று முடிந்துவிட்டால் அவர் அமலாக்கத் துறையின் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் எடுக்க வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் இருக்கிறார். இதன் காரணமாக அறிவாலய வட்டாரங்கள் பெரும் பரபரப்பில் இருந்து வருகிறது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை போனில் தொடர்பு கொண்டு அமைச்சரின் சிகிச்சைகளைப் பற்றியும் அவர்கள் அவரின் உடல் நலத்தைப் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டு வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.


அமலாக்கத் துறையினரின் குறி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மட்டுமல்லாது அவருடைய சகோதரர் மீதும் பாய்ந்து இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமார் என்பவருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.


அதுமட்டுமல்ல அமைச்சரின் சகோதரரையும் இம்முறை விசாரிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே திமுக அமைச்சர் பட்டியலில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அமலாக்கத்துறை வசம் சிக்கினால் கண்டிப்பாக செந்தில்பாலாஜியிடம் கிடைக்க வேண்டிய தகவல்களை செந்தில்பாலாஜியின் தம்பியிடம் அமலாக்கத்துறை கேட்டுப்பெறும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் செந்தில்பாலாஜி தற்போது அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருப்பதால் 3 மாதங்கள் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதால் அமலாக்கத்துறை பிளான் பி'யாக செந்தில்பாலாஜியின் தம்பியை நெருங்கிவருவதாகவும் இது செந்தில்பாலாஜி தரப்பிற்கு பெரும் பின்னடைவு எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


இது மட்டுமல்லாமல் தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த அரசியல் விமர்சகர் கிரைம் செல்வராஜ் கூறுகையில் செந்தில்பாலாஜியை பிடிப்பதும் அவரது தம்பி அசோக்கை பிடிப்பதும் அமலாக்கத்துறைக்கு ஒன்றுதான்!

மேலும் அமைச்சரின் தம்பி அசோக்கை பிடித்தால் அது செந்தில்பாலாஜிக்கே வினை என தெரிவித்துள்ளார். மேலும் கிரைம் செல்வராஜ் கூறுகையில் வாரம் 250 கோடி ரூபாய் வசூல் டாஸ்மாக் மூலம் நடந்தது செந்தில்பாலாஜியின் தம்பி அஷோக்குமாருக்கு தெரியும் அதனால் கண்டிப்பாக அமலாக்கத்துறையின் அடுத்த ஸ்கெட்ச் செந்தில்பாலாஜியின் தம்பியை நோக்கித்தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News