Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றாத டுவிட்டர் நிறுவனம்: ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

மத்திய அரசின் உத்தரவை பின்பற்றத்த தவறிய டுவிட்டர் நிறுவனத்திற்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் விதித்து கர்நாடகா ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவை  பின்பற்றாத டுவிட்டர் நிறுவனம்:  ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

KarthigaBy : Karthiga

  |  1 July 2023 1:00 PM GMT

மத்திய- மாநில அரசுக்கும் அரசின் உத்தரவுகளுக்கும் எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த கருத்துக்களால் பொது அமைதி சீர்குலைந்து விடுகிறது. மேலும் போலி கருத்துகளால் வன்முறைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது . இந்த நிலையில் இது போன்ற போலி பதிவுகள் வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்களை பதிவிடும் சமூக வலைதள கணக்குகளை முடக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.


அதன்படி சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு சார்பில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில் சமூக விரோத செயல்களில் தொடர்புடையதாக கூறி கடந்த 2021- ஆம் ஆண்டு 2851 கணக்குகளையும், 2022 ஆம் ஆண்டு 2000-க்கும் அதிகமான கணக்குகளை தடை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் இதனை பின்பற்ற தவறினால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் டுவிட்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.


எனினும் மத்திய அரசின் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் டுவிட்டர் நிறுவனம் இருந்து வந்தது. மேலும் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகா ஐகோர்டில் டுவிட்டர் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை ஹைகோர்ட் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது டுவிட்டர் நிறுவனம் சார்பில் வாதாடிய வக்கீல் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவது அவரவர் விருப்பம். அதை தடுக்க நினைப்பது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். அதையும் மீறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வலைதள கணக்குகளை பதிவிடுபவர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


இருதரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்ட நீதிபதி பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்துக்களை பதிவிடுவதை தடுப்பதற்காக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் டுவிட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசின் உத்தரவை கடைபிடிக்க தவறிய டுவிட்டர் நிறுவனம் 50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.


அத்துடன் நிறுவனத்தின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும் ரூபாய் 50 லட்சம் அபராதத்தை டுவிட்டர் நிறுவனம் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் அவர் 45 நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால் 45 நாட்களுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் ரூபாய் ஐந்தாயிரம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News