Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு : வானில் நீல நிலவு காட்சி

A rare event that occurs once in two and a half years: A blue moon in the sky

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு : வானில் நீல நிலவு காட்சி

KarthigaBy : Karthiga

  |  30 Aug 2023 11:15 AM GMT

நிலவினுடைய சுழற்சி முறை நிலவின் சுழற்சி காலம் 29.5 நாட்கள் .ஒவ்வொரு 29.5 நாட்களுக்கு ஒரு முறை சூரியன்- பூமி - நிலா ஒரே நேர்கோட்டில் வந்து கொண்டிருக்கும். அதன்படி ஒவ்வொரு மாதத்திற்கும் ஒருமுறை முழு நிலவு தோன்றும். வருடத்திற்கு 12 முறை முழு நிலவை பார்க்கலாம் .நிலவின் சுழற்சி கால அடிப்படையில் பார்த்தால் ஒரு வருடத்தின் 12 சுழற்சிக்கு பின்னர் 11 நாட்கள் மீதம் இருக்கும். இந்த மீதமிருக்கும் நாட்கள் சேர்த்து ஒவ்வொரு இரண்டு புள்ளி ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நீல நிலவு நிகழ்வு நடைபெறும் .அதுவும் 31 நாட்கள் உள்ள மாதங்களில் நடைபெறுகிறது .


அந்த வகையில் வானில் ஏற்படும் அரிய நிகழ்வான நீல நிலவு எனப்படும் நீல நிலவு நாளை தோன்ற உள்ளது . இது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பு மைய செயல் இயக்குனர் லெனின் தமிழ் கோவன் கூறும்போது ஒரு மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு வந்தால் அது நீலநிலா என்று சொல்லப்படுகிறது . ஒவ்வொரு மாதத்திலும் நீல நிலா வருவதுண்டு. பொதுவாக வெளிநாடுகளில் ஒவ்வொரு மதத்திலும் வரும் நீலநிலவுக்கு பெயர் வைத்துள்ளனர் . அந்த வகையில் ஜனவரி மாதம் வரும் நீல நிலவுக்கு 'ஓநாய்' என்று பெயரிடப்பட்டுள்ளது.


அதேபோல் நம் நாட்டிலும் வைகாசி விசாகம் ,புத்தபூர்ணிமா என்றெல்லாம் பெயர் வைத்துள்ளோம் . இந்த நீலநிலவை அறிவியல் மையங்களில் வந்து தான் பார்க்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே வானில் பார்க்கலாம். அந்த வகையில் சென்னையில் 31- ஆம் தேதி இரவு 7 .5 மணி முதல் வானில் நிகழும் ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் 30ஆம் தேதி பார்க்க முடியும். ஒரே மாதத்தில் நீல நிலவு அடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தான் வரும்.


தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை ,வேலூர் ஆகிய நான்கு இடங்களில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் செயல்படுகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை வானுக்கு நிகழ்வு நடைபெறுகிறது .ஆர்வம் உள்ள மாணவர்கள் சராசரியாக 100 பேர் வீதம் வந்து நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News