சபரிமலையில் தங்க கவசங்களை செம்பு கவசங்கள் என மோசடியாக ரெஜிஸ்டரில் பதிவு செய்த அதிகாரி பணி நீக்கம்!!

By : G Pradeep
கேரள சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு விஜய் மல்லையா 30 கிலோ தங்கத்தை வழங்கியதாகவும், அந்த தங்கத்தை கோவிலின் மேல் பகுதி மற்றும் துவார பாலகர்களின் சிலை போன்றவற்றில் பதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் வார பாலகர்களின் சிலை மீது தங்கம் பதிப்பதற்கு சென்னைக்கு எடுத்து சென்ற பொழுது எடுத்துச் சென்ற நாட்களில் இருந்து 39 நாட்களுக்குப் பின் தான் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு செம்பு கலசங்கள் மீது பூசப்பட்ட தங்கம் ஆவி ஆகிவிட்டதா? என திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு எதிராக கேள்வி எழுப்பினார். இந்நிலையில் துவார பாலகர்கள் சிலைகளின் மேல் அமைந்திருந்த தங்க கவசங்களை பராமரிப்பதற்காக கடந்த மாதம் 7ஆம் தேதி சென்னைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் அதன் எடை ஏற்கனவே இருந்ததை விட 4 கிலோ குறைந்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
பொதுவாக கோவிலின் விலை மதிப்பு மிக்க பொருட்களை பராமரிப்பது கோவில் வளாகத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றாமல் அது அதிருப்தியை ஏற்படுத்துகிறது என்று கேரளா ஐகோர்ட் தெரிவித்தது. ஆனால் சென்னை ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவனம் தங்களிடம் செம்பு கவசங்கள் தான் வழங்கப்பட்டதாகவும், இதன் பிறகு தங்கம் பதித்து அனுப்பி வைத்ததாக தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக கிரைம் பிரான்ச் குழுவை கேரளா ஐகோர்ட் நியமித்து தேவசம் விஜிலென்ஸ் அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
இதைத்தொடர்ந்து தங்க கவசங்களை செம்பு கவசங்கள் என மோசடியாக ரெஜிஸ்டரில் பதிவு செய்த அதிகாரியான முராரிபாபு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே காணாமல் போன தங்க கவசங்கள் என்ன ஆனது என்பது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
