நாகப்பட்டினத்தில் மல்லுக்கட்டும் விடுதலை சிறுத்தை கட்சி!!

By : G Pradeep
நாகையில் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வேட்பாளரான முகமது ஷாநவாஸை பிரச்சாரத்தின் போது வெளியூர்க்காரர் என்று கூறினர். இருந்தாலும் அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகி வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து தற்பொழுது வரப்போகும் தேர்தலிலும் தொகுதி அவருக்குத்தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாக தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னுடைய தொகுதியில் பெரிதாக எதுவும் செய்யாததால் இந்த முறை அவருடைய வெற்றி என்பது கேள்விக்குறி தான் என்று பகுதியில் இருக்கும் திமுகவினர் வருகின்றனர். இந்நிலையில் தொகுதியை இந்த முறை விசிகாவிற்கு ஒதுக்காவிட்டாலும் கூட அவர் போட்டியிடுவார் என்று கட்சிகாரர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் முகமது ஷாநவாஸ் மீண்டும் வாக்களித்தால் உள்ளடி வேலைகளுக்கு பஞ்சம் வராது என்று மாவட்ட திமுக செயலாளர் கவுதமன் நாகையில் திமுக போட்டியிட்டால் நல்லது என்றும், தான் போட்டியிடுவதற்கும் தயார் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜீவானந்தம் மற்றும் ஜெயபால் போன்ற பலர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடந்த முறை போட்டியிட்ட தங்க கதிரவன் நாகையை பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தாவெக சார்பில் சுகுமாரன் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த சுகன்யா, கிங்ஸ்லி ஜெரால்டு போன்றவருக்கும் போட்டியிடுவதற்கு விருப்பம் இருப்பதாக தெரிகிறது. மேலும் விசிக கூட்டணியில் சீட் குடுக்கவிட்டாலும் கூட போட்டியிடுவதற்கு தயாராக உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தினாலேயே திருமாவளவனுக்கு கொடைச்சல் ஏற்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தின் பொதுமக்கள் எந்த கட்சியாக இருந்தாலும் வேட்பாளர்கள் யார் என்பதை பொறுத்து தான் வெற்றியா? தோல்வியா? என்பது தெரியும் என கூறியுள்ளனர்.
