பப்பர் கல்சா தீவிரவாதிகள் பிடிபட்டனரா? பஞ்சாபில் இருந்த இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது!!

By : G Pradeep
1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தீவிரவாத அமைப்பான பப்பர் கல்சா பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடைய ஆதரவுடன் பஞ்சாபில் ரகசியமாக செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்பானது கடந்த 1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தை குண்டு போட்டு வெடிக்க வைத்தது.
மேலும் ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் பஞ்சாபின் ஜலந்தர் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது அவர்கள் இருவரும் நிஷான் ஜூரியன், ஆதேஷ் ஜமாராய் என்று தெரியவந்தது.
இந்த இரண்டு தீவிரவாதிகளும் தங்கி இருந்த வீட்டை ஆய்வு செய்தபோது அங்கிருந்து 2.5 கிலோ அளவுள்ள வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் ஐஎஸ்ஐ பாகிஸ்தான் உளவு அமைப்பின் உதவியுடன் பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் போலீசார் இந்த உழவு அமைப்பால் பஞ்சாப்புக்குள் ஆயுதம், போதைப் பொருள்கள் என பலவற்றை கடத்தி வந்த நிலையில் 5 கிலோ போதை பொருள் பெரோஸ்பூர் பகுதியில் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினர். இந்நிலையில் இந்த அமைப்புடன் தொடர்புடைய சஜன், ரேஷாம் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்பொழுது இரண்டு தீவிரவாதிகள் கைது செய்து அவர்களிடமிருந்த வெடிபொருட்களை பறிமுதல் செய்து பாகிஸ்தானின் சதிகளில் இருந்து வெளிவந்ததாக கூறினர்.
