அமைதிக்கான நோபல் பரிசு அதிபர் ட்ரம்புக்கு இல்லையா?? காரணம் என்ன தெரியுமா??

By : G Pradeep
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் குறிப்பிட்ட நபர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகளை வழங்குவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் நோபல் பரிசு குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தது. அதில் அமைதிக்கான நோபல் பரிசு தனக்குத்தான் வழங்க வேண்டும் என்று பல இடங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவந்த நிலையில் பலதரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் மருத்துவம், இயற்பியல், இலக்கியம் மற்றும் வேதியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக அமைதிக்கான நோபல் பரிசு வெளியிடப்பட வேண்டிய நிலையில் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்த முயம் இருந்தது.
இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு தான் வழங்க வேண்டும் என்று கூறி வருவது ஒரு முக்கிய காரணமாகும். இதைத்தொடர்ந்து அவர் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு தராவிட்டால் இது அமெரிக்காவுக்கே அவமானம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து தான் 8 போர்களை அமைதிக்கு கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டினார். மேலும் ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியதில் லாஜிக்கே இல்லை என்று கூறினார்.
நோபல் பரிசுக்கான ஷார்ட் லிஸ்ட்டில் அதிபர் ட்ரம்பின் பெயர் இல்லாததாவும், அவர் பதவியேற்றதே ஜனவரி 20ஆம் தேதி என்பதால் ஜூலைக்கு மேல் தான் தலைவர்கள் அவருடைய பெயரை குறிப்பிட்டதால் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டிரம்பிற்கு வழங்கப்படவில்லை என்று கூறி வருகின்றனர்.
