புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மேப்பில்ஸ் செயலி!! அனைவரும் பயன்படுத்த அமைச்சர் அஸ்வினி வலியுறுதல்!

By : G Pradeep
சுதேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்த பிரதமர் மோடி அனைவரையும் வலியுறுத்தி வருவதாகவும், அதைத்தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்நாட்டு மென்பொருள் சேவைத்தளமான ஜோஹோ நிறுவனத்திற்கு தன்னுடைய அலுவலக பயன்பாட்டிற்காக மாறிவிட்டதாக கூறினார்.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் ஜோஹோ நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை போல அறிமுகப்படுத்திய அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள வழிகளை காட்டும் செயலியான மேப்பில்ஸை பயன்படுத்த ஆரம்பித்து உள்ளதாகவும், செயலியை பயன்படுத்தி காரில் பயணம் செய்வது போன்ற வீடியோ வெளியிட்டு வந்ததுடன் இந்தியர்கள் அனைவரும் இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த செயலி நாடு முழுவதும் இருக்கும் அனைத்து இடங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புதிய செயலியை ராகேஷ், ராஷ்மி என்ற அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த தம்பதியர் இந்தியாவிற்கு வந்து சிஇ இன்போ சிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கிய நிலையில் தற்போது மேப்மை இந்தியா என்று பெயரை மாற்றியுள்ளனர்.
